சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை

இரகசிய முகாம்கள், சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை. அவ்வாறான முகாம்கள் நடத்தவேண்டிய தேவை இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 25 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வீமம்காமம் பகுதியில் இரு வீடுகள் இராணுவத்தினரின் சித்திரவதை கூடமாக இயங்கி இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

Related Posts