ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த 28 வயதுடைய இளைஞன் ஒருவரை செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், வீதியில் நின்றுகொண்டு பல நாட்களாக தாதி பெண்ணை நக்கலடித்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கட்கிழமை (28) பணிக்குச் செல்லும் போது, தாதியின் பின்னால் வந்த இளைஞன் அவரின் கையைப் பிடித்து இழுத்துள்ளார்.
இதையடுத்து,கையை உதறிவிட்டு தப்பித்து வந்த தாதி பெண், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.