நேற்று காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சியாக 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்தன.
இவ்வாறு சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தற்காலி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளிநொச்சி பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.