உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே, எண்ணெய் விலை அதில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் விலையை குறைப்பதன் மூலம் மக்கள் சுரண்டப்படுவதை பாதுகாக்குமாறு ரஞ்சித் விதானகே அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் அனைத்து மரக்கறிகளும் 250 கிராம் 100 ரூபாவாக காணப்பட்டதுடன், 100 கிராம் பச்சை மிளகாய் 140 ரூபாவாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
மரக்கறி விலைகள் அதிகரிப்பு குறித்து அரசாங்கம் இதுவரை அவதானம் செலுத்தாமை வருத்தமளிக்கும் செயல் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.