கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையில் இருந்து தப்பினார் இலங்கைப் பெண்

சவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குறித்த பெண் மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.

Related Posts