Ad Widget

ரூ.10,000 கொடுப்பனவு 3 கட்டங்களாக அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்படும்

அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த ஜனவரி மாதமளவில் 2000 ரூபாவை அடிப்படைச் சம்பளத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் ஆற்றும் விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் புதிதாக இணைக்கப்படும் அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் நீக்கப்படாது எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாகனங்களுக்கான குத்தகை மதிப்பீட்டு கட்டணம் கார்களுக்கு 5000 ரூபாவும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 3000 ரூபாவும் அறிவிடப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் புகைப் பரிசோதனைக்கு இடைக்கால கட்டணமாக 1500 ரூபா அறவிடப்படவுள்ளதாகவும், வாகனங்களின் வருமான வரி பத்திர கட்டணம் 25 வீதத்தில் இருந்து 15 வீதமாக குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts