பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இராணுவத்திடம் இருந்து மீட்கப்படும்! – கல்வி அமைச்சர்

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அரசு பொறுப்பேற்கும் என்று என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது, 14 கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்ட பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது சுட்டிக்காட்டினார். இதன்போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related Posts