பயணிகளுடன் கொழும்பு சென்ற பஸ் தடுத்து வைப்பு

வழி அனுமதிபத்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸை வெள்ளிக்கிழமை (27) கொடிகாமம் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் மறித்து சோதனையிட்டனர்.

இதன் போது, வழி அனுமதிபத்திரத்தில் போலியான கையெழுத்தினை பாவித்து, சேவையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளதுடன், முற்றுகையிடப்பட்ட பேருந்தினை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வாகன உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க என்.பண்டார தெரிவித்தார்.

Related Posts