இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்பொன்றிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதானது சட்டவிரோத செயல் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சார்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை தற்பொழுது காணக்கூடியதாக உள்ளதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளது.
இதேவேளை ´பாதி பதில் வேண்டாம் சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்´ என்னும் வாசகத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் மதகுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.
இலங்கை சம உரிமை இயக்கத்தினால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.