யாழ். மாவட்டத்தில் ஒரே பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றும் கிராம சேவகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றும் கிராம சேவகர்களில் பலர் 2016ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்ற அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
ஆரம்பகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதால் குறித்த பட்டியல் இன்னும் முழுமைப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முழுமைப்படுத்தும் பணிகள் நிறைவுற்றதும் கிராம சேவகர்களுக்கான இடமாற்றப் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.