Help for Smile என்ற புலம்பெயர் தமிழ் அமைப்பினால் வெள்ளநிவாரண உதவிகள்

தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் நாட்டின் ஹெல்ப் 4 சிமைல் (Help for Smile) என்ற புலம்பெயர் தமிழர்களது அமைப்பின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களுக்கு ஹெல்ப் 4 சிமைல் (Help for Smile) என்ற ஜேர்மனி புலம்பெயர் தமிழர்களது அமைப்பின் நிதி உதவியிலிருந்து முதற் கட்டமாக 150 குடும்பங்களுக்கு கடந்த 18-11-2015 அன்று அரிசி பருப்பு நூடில்ஸ் உள்ளிட்ட நிவாரண உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உபதலைவி திருமதி பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட கட்சி அங்கத்தவர்களால் மேற்படி உதவிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

Help for Smile (1)

Help for Smile (2)

Help for Smile (3)

Help for Smile (4)

Help for Smile (5)

Help for Smile (6)

Help for Smile (7)

Help for Smile (8)

Help for Smile (9)

Help for Smile (10)

Related Posts