யாழ். கச்சேரியடியில் கோர விபத்து!

யாழ். செயலகத்துக்குப் பின் புறமாக உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்றை கொழும்பில் இருந்து யாழ். நோக்கி வந்த கடுகதி ரயில் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் காரில் பயணம் செய்த தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியியலாளராக கடமையாற்றும் ‪வி.‎சுதாகரன்‬ (வயது 41) என்பவர் உயிரிழந்தார். ‎அரவிந்தன்‬ (வயது 28), ‪தர்மதாசன்‬ (வயது 23), ‎ஆதவன்‬ (வயது 28) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

ரயில் காரை மோதியதுடன் சிறிது தூரம் இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Related Posts