Ad Widget

ஐ.நா சபையின் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதியின் வருகை இன்று!

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் (Samantha Power, U.S. Permanent Representative to the United Nations) இன்று (21) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் சமந்தா தற்போது இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இவர் இன்று (21) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.

இவ்விஜயத்தின் போது அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் இளைஞர்கள் என பலரையும் இவர் சந்தித்து உரையாற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினையும் மேற்கொள்ளவுள்ள இவர் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள உள்நாட்டு ஊடகவியலாளர்களை நேரில் சந்திக்கவுள்ளார். மேலும் யாழ். விஜயத்தின் போது இவர் மோதல்களினால் சேதமடைந்த ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதுடன் யாழ்ப்பாண நூலகத்தினையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts