பரணகம ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க 2538 பேர் யாழ்ப்பாணத்தில் விண்ணப்பம்!

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் சாட்சியமளிக்க இதுவரை 2 ஆயிரத்து 538 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விசாரணை அடுத்த மாதம் 11 தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெறவுள்ளன.

எனினும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க இன்னும் பலர் முன்வருவர் என யாழ். அரச அதிபர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.

Related Posts