வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தார் முதலமைச்சர்!

யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று நேரில் பார்வையிட்டு, உலர் உணவு பொதிகளையும் வழங்கினார்.

கடந்த 3 தினங்களாக யாழ்.குடாநாட்டிலும் பெய்த கனமழையினால் தாழ்நில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியுள்ள கல்லாரை பகுதியை சேர்ந்த மக்களை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மல்லாகம் மகாவித்தியாலயத்தில் சந்தித்து மக்களுடைய குறைகளை கேட்டறிந்து கொண்ட முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறையினால் உலர் உணவு பொருட்களையும் வழங்கினார்.

தொடர்ந்து வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை கோணப்புலம் முகாமில் சந்தித்த முதலமைச்சர், அங்கும் மக்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்கினார்.

விடாது கொட்டித் தீர்த்த கனமழை வடக்கில் நேற்று மாலையிலிருந்து குறைந்துள்ளது. இருப்பினும் வெள்ளம் வடிந்தோடாமையினால், மக்கள் தற்காலிக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் 28 ஆயிரத்து 314 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 268 பேர் இந்தக் கனமழையினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 736 குடும் பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 695 பேர் 110 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட் டுள்ளனர்.

கடந்த ஐந்து தினங்களில் 350 மில்லி மீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தக் கனமழை காரணமாக வடக்கு மாகாணம் எங்கும் வெள்ளக் காடாகியுள்ளது.

cm-visit-flood-victims-3

cm-visit-flood-victims-2

cm-visit-flood-victims-1

Related Posts