அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை (13) வடக்கில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
‘அரசியல் கைதிகளின் விடுதலையானது அவசியமானது. அவர்களின் விடுதலையை வலியுறுத்திய வகையில் மேற்கொள்ளப்படும் இந்தக் ஹர்த்தாலுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம்.
அடிப்படைத் தேவைகள் தவிர்ந்து, மற்றவர்கள் அனைவரும் இந்தக் ஹர்த்தாலுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்’ என டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.