கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் முதல் காணவில்லையென சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் குடும்பச் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தானும் வீட்டை விட்டுச் செல்லவுள்ளதாக சிறுமி அடிக்கடி கூறி வந்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.