மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் 18ஆம் திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்துவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பொருட்களை இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில், குருக்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.