தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட தலைவர் திரு ஸ்ரீஞானேஸ்வரன் திருமதி சிறீஞானேஸ்வரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார பொறுப்பாளர் திரு அண்ணாத்துரை ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நேற்று காலை பரந்தன் சிவபுரத்தில் தமிழினி அவர்களது புகழுடல் வைக்கப்பட்டிருந்த அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் இறுதி நிகழ்விலும் பங்குபற்றியிருந்தனர்.
இறுதி நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தியிருந்தனர்.
அஞ்சலி நிகழ்வுகள் அனைத்தும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளி வெற்றிச்செல்வி அவர்களது தலைமையில் நடைபெற்றது.






















