உக்கக்கூடிய குப்பைகளை நல்லூர் பிரதேச சபை ஏற்காது

குடிமனைகளிலிருந்து அகற்றப்படும் குப்பைகளில் உக்கக்கூடிய குப்பைகள் தவிர்ந்து ஏனைய குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பைகளை, நல்லூர் பிரதேச சபை நிர்வாகம், குடியிருப்பாளர்களுக்கு புதன்கிழமை (14) முதல் வழங்கி வருகின்றது.

கண்ணாடிப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தகரம் என குப்பைகளை மூன்று வகையாகப்பிரித்து அவற்றை போடுவதற்காக தனித்தனியான பைகள் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மீள்சுழற்சிக்குப் பயன்படுத்தவுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

ஆனால், குடியிருப்பாளர்களால் வெளியேற்றப்படும் உக்கக்கூடிய குப்பைகளை பிரதேச சபை சேகரிக்கமாட்டாது நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts