Ad Widget

கொலையற்ற மரணம் ஏற்படுத்தியவருக்கு 16 வருட கடூழியச் சிறை! ரூ.10 ஆயிரம் அபராதம்!!

மனைவியைக் கொலையற்ற மரணம் செய்த கணவனுக்கு 16 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி கைதடி கிழக்கில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்தனர்.

சாவகச்சேரி நீதிமன்றில் இவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

அங்கு தொடர்ந்து இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி தனது தீர்ப்பில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இது திட்டமிட்ட கொலை அல்ல. எனவே, கொலையற்ற மரணம் ஏற்படுத்திய குற்றத்துக்காக குற்றவாளிக்குப் 16 வருடங்கள் கடூழிய சிறையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.

Related Posts