யாழில் வேலையின்மை அதிகரித்துள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையின்மையானது, 5.6சதவீதமாகக் காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013ஆம் ஆண்டு 5.1 ஆக இருந்த இந்த சதவீதமானது, தற்போது 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான தொழில்துறைகள் யாழ்ப்பாணத்தில் இல்லாமையால் அவர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீரக்க முடியவில்லை.

இதனைவிட பட்டதாரிகள் பலரும் வேலையற்று இருப்பதால் இந்த சுட்டியானது அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு இன்மை காரணமாக பல இளைஞர், யுவதிகள் மத்திய கிழக்கு மற்றும் பிறநாடுகளுக்கு இடம்பெயருக்கின்ற நிலைமையும் யாழ்ப்பாணத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது.

Related Posts