யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்புக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி மென்பான நிறுவனம் ஒன்றின் விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டிருந்தது.
தமது நிறுவனத்தின் விளம்பரப் பதாகையானது பொருத்தப்பட்டது விசமிகளின் செயல் எனவும் அதற்கு மனவருந்துவதாகவும் குறித்த மென்பான நிறுவனம் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது.
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின் சிலையானது யாழ்.மாநகர சபையால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் கௌரவமிக்க மன்னரான சங்கிலியனின் சிலையானது போற்றப்படக்கூடிய வகையில் இருக்கும் நிலையில், சிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் மென்பான நிறுவனத்தின் விளம்பர பதாகை பொருத்தப்பட்டிருந்துடன், அது மாநகர சபையால் பின்னர் அகற்றப்பட்டது.
இது அந்நிறுவனத்தின் யாழ்.மாவட்ட முகவர், பத்திரிகைகளில் மனம் வருந்திய விளம்பரம் ஒன்றை பிரசுரித்துள்ளார். ‘விசமிகளால் அந்தப் பதாகை கட்டப்பட்டதாகவும் மக்களுக்காக தியாகம் செய்தவர்களை என்றென்றும் மதிக்கின்றோம். இந்தச் செயல் தொடர்பில் மனம் வருந்துகின்றோம்’ என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

