Ad Widget

அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய விடயங்களில் எதிர்ப்போம்! – இரா.சம்பந்தன்

2016ம் ஆண்டு எமது மக்களின் அரசியல் தீர்வுக்கான பிரச்சினைகள் அணைத்தும் தீர்க்கப்படும் அதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நேற்று மாலை கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உடனான சந்திப்பு ஒன்று, யாழ் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்புக்கு பிரதம அதிதியாக இரா. சம்பந்தன் கலந்துகொண்டார். இதில் எதிர்காலத்தில் கட்சியின் ஊடாக இடம்பெறவுள்ள மக்களுக்கான சேவைகள் மற்றும் அதனூடாக மக்கள் எதிர்பார்க்கும் தேவைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்..

அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய விடயங்களில் நாம் எதிர்ப்போம். முன்னைய பல கஸ்டங்களை மக்கள் அனுபவித்துள்ளார்கள் அவர்களின் ஒரு பகுதியினார் எதிர்கட்சியில் இருக்கின்றனர்.

அவர்களின் செயற்பாட்டையும் தற்போதை அரசாங்கம் செய்படுகின்ற விதத்தினையும் அவதானித்து பார்க்கமால் இருக்க முடியாது. ஆனால் சில மாற்றங்களை அவதானிக்கின்றோம்.

நாம் நாட்டினை பிரிக்கும் படியாக கேட்கவில்லை ஒருமித்த நாட்டுக்குள் தீர்வினை பெறவேண்டும் என்பது தான் நாம் கூறிவருகின்றோம்.

இது ஒருமுக்கியமான காலகட்டம் இது தொடர்பான காரணங்கள் சிலகாலங்களில் ஆரம்பிக்கலாம் அப்படியான சம்பங்கள் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றன. இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் இக்காரணத்தால் வேறுப்பட்ட காரணங்களை கூறிவைக்க முடியாது.

அந்தவகையில் ஒற்றுமையினை பேணிப் பாதுகாக்க வேண்டும் எங்கள் மத்தியில் கட்சிக்குள்ளே தீர்க்கவேண்டிய பிரச்சிணைகளை பகிரங்கமாக வெளியில் பேசுவது அர்த்தமாற்ற செயல் என, நான் நினைக்கின்றேன், என்றார்.

Related Posts