சாவகச்சேரியில் வயோதிபர் தூக்கிட்டுத் தற்கொலை

சாவகச்சேரி – சப்பச்சிமாவடிப் பிரதேசத்தில் வயோதிபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு திங்கட்கிழமை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மீசாலையை வதிவிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா நவசிவாயம் என்ற 63 வயதுடைய வயோதிபர் நேற்றிரவு முதல் காணாமற்போயிருந்தார்.

இந்நிலையில், சப்பச்சிமாவடியிலுள்ள மகளின் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் சில காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts