ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்புரிமையாளர்கின் கணக்கில் இருந்து நூற்றுக்கு 30 சதவீதத்தை கடனாக பெற்றக்கொள்ளும் வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் விரிவுப்படுத்துமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டப்ளியு. ஜே.செனவிரத்ன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த செயற்பாடு, பிரதான காரியாலயத்தில் மட்டும் முன்னெடுக்கப்படுவதால், கடுமையாக தாமதமாகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடன் பெற்றுக்கொள்வதற்கு 65 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் 3,700 பேருக்கே கடன் வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் காரியாலய இடவசதி போதாமை காரணமாக இவ்வாறு தீர்மானித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.