திருநெல்வேலி சிவன் வீதியில் சிவன் அம்மன் கோயில்களுக்கு முன்பாக உள்ள சுமார் இருநூறு வருடங்களுக்கு பழைமைவாய்ந்த அரச மரத்தின் பெரும் கிளை திடீரென முறிந்து வீழ்ந்ததால் மூன்று கடைகள் சேதமடைந்தடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. வீதியில் வீழ்ந்துள்ள போதிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டமையால் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கும் தெய்வாதீனமாக சேதங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.