வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் உதயம்

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், 13ஆம் திகதி உதயமாகியுள்ளது. யாழ்ப்பாண ஊடக மையத்தில் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் போதே இது உருவாக்கப்பட்டது.

medai-comuty

வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

தகவல் அறியும் உரிமை தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் மாதம் 10 திகதி கிளிநொச்சியில் தகவல் அறியும் உரிமை தொடர்பாக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்றினை நடத்துவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கத் சு.பாஸ்கரன் (கிளிநொச்சி), இணைத் தலைவர்களாக வாஸ் கூஞ்சா (மன்னார்), றொமேஸ் மதுசங்க (வவுனியா), செயலாளராக கி.வசந்தரூபன் (வவுனியா), உப செயலாளராக ம.நியூட்டன் (யாழ்ப்பாணம்) பொருளாளராக கே.செல்வகுமார் (யாழ்ப்பாணம்), நிர்வாக குழு உறுப்பினர்களாக ஜெ.யூட்பெலிசியஸ் (மன்னார்), எஸ்.ஜெயபாலன் (யாழ்ப்பாணம்), ரட்ணகாந்தன் (வவுனியா), வி.தனபாலசிங்கம் (முல்லைத்தீவு), வே.தமிழ் செல்வன் (கிளிநொச்சி), ஏ.எஸ.எம்.பஸ்மி (மன்னார்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வில், யாழ். ஊடக மையத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ர. தயாபரன், யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல், வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க செயலாளர் ந. கபில்நாத் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts