கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குடும்பப் பிணக்குக் காரணமாக தனக்குத் தானே தீமூட்டி எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மரணமானார்.
யாழ்ப்பாணம், நாவாந்துறை மணற்திட்டைச் சேர்ந்த இளம்குடும்பப் பெண்ணான யூலியஸ் நிலாறோஸ் (வயது 21) என்பவரே மரணமானவராவார்.
தினமும் கணவர் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிடுவது வழமை எனவும் கடந்த மாதம் 12ஆம் திகதி இரவு கணவர் குடித்துவிட்டு வந்து சண்டையிட்டார் எனவும் இதனைத் தொடர்ந்து கணவர் நித்திரைக்கு சென்றதும் தனக்கு தானே தீ மூட்டி எரிந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி மரணமானார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம் பெற்ற மரண விசாரனையைத் தொடர்ந்து சடலம் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.