தெல்லிப்பழைப் பொலிஸார் சிரமதானம்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

tellippalai-police

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த தலைமையில் இடம்பெயர்ந்து தனியார் கட்டடத்தில் இயங்கிவரும் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூயின் ஆரம்பப் பிரிவுப் பாடசாலை அமைந்துள்ள வளாகப் பகுதியில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மடவெல் கலந்துகொண்டார். சிரமதானப் பணியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பொலிஸார் கலந்துகொண்டு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டார்கள். பாடசாலை வளாகத்தில பாதுகாப்பற்றுக் காணப்பட்ட கிணறு பாதுகாப்பு நடவடிக்கை செய்யப்பட்டதுடன் வளாகத்தில் காணப்பட்ட பற்றைகள் வெட்டப்பட்டு குவிக்கப்பட்டு கிடந்த கற்கள் அகற்றப்பட்டு துப்பரவுப் பணிகள் இடம்பெற்றமையால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள எதிர்நோக்கிய அடிப்படை சுகாதார சீர் கேடுகளும் சீர்செய்யப்பட்டுள்ளன.

Related Posts