இலங்கை அவுஸ்திரேலியா கடற்படை இணைந்து கூட்டுப் பயிற்சி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

சட்டவிரேத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்திய கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து பயனுள்ள மற்றும் திறமையான பங்களிப்பை செய்கின்றது.

இருநாட்டு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு போன்று உள்ளக செயன்முறை திறமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது இந்த இணைந்த கூட்டு கடற்படை பயிற்சியின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts