விபத்துக்களை ஏற்படுத்தும் மின்கம்பங்களை அகற்றுமாறு கோரிக்கை

ஆவரங்கால் சந்தியில் இருந்து அச்சுவேலி வைத்தியசாலை வரை, வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த பழைய மின்கம்பங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆரம்பகாலத்தில் நடப்பட்ட மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவது துண்டிக்கப்பட்டு வீதிகளின் அருகில் உள்ள காணிகள் ஊடாக அப்பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அங்கு ஏற்கெனவே இருந்த பழைய மின்கம்பங்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால், போக்குவரத்துக்கு இவை பெரும் இடையூறாக காணப்படுகின்றன. இதனால் சிறு விபத்துக்களும் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகள் கவனத்திற்கொண்டு தேவையற்ற மின்கம்பங்ளை அகற்றி தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts