கர்ப்பிணித் தாய்மாருக்குத் தேவையற்ற விதத்தில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றீடு வழங்கப்படும் என உடுவில் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்ப்பிணித் தாய்மாருக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் சத்துணவுகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய கர்ப்பிணித் தாய்மாருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுன்னாகம் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தால் கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டமைக்கு மாறாக சோடா, பிஸ்கட் மற்றும் சலவைப்பவுடர் என்பவற்றை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் உடுவில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பிரதேச செயலாளர் சங்க பொது முகாமையாளரிடம் இந்தப் பொருட்கள் வழங்கியமை தொடர்பில் விளக்கம் கோரியிருந்ததுடன், உரியவர்களின் தகவல்களும் வழங்கப்பட்டன. இதனையடுத்து, உரிய பொருட்கள் மாற்றீடு செய்து வழங்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்தி
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பெருட்களில் குளறுபடி