Ad Widget

சைக்கிள் சின்ன முதன்மை வேட்பாளரை இலக்கு வைத்து வவுனியாவில் பொலிசார் மீண்டும் அடாவடி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை இலக்கு வைத்து பொலிசாரின் அடாவடிச் செயற்பாடுகள் தொடர்கின்றன.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று புதன்கிழமை சைக்கிள் சின்னத்தின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் அவர்களை அழைத்து வருவதற்காக அவருடைய வாகன சாரதி தனது வாகனத்தினை தனது வீட்டில் இருந்து வேட்பாளரின் வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்த போது அவர்களது அலுவலகம் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் வழிமறித்த பொலிசார் குறித்த வாகனத்தில் வேட்பாளர் இல்லாது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து வேட்பாளருக்கு சாரதி தெரிவித்ததும் பொலிஸ் நிலையத்திற்கு வேட்பாளர் சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரமாக அவர்களை மறித்து வைத்திருந்த பொலிசார் அதன் பின் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளரின் ஸ்ரிக்கர்கள் அனைத்தும் கிழித்து எறிந்து விட்டு வாகனத்தை விடுவித்துள்ளனர்.

நேற்று முன்தினமம் முகப்புத்தக விடயம் தொடர்பில் பொலிசார் இவரை நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில வேட்பாளர்களின் வாகனங்கள் பல வேட்பாளர் இன்றி ஸ்டிக்கர்களுடன் நகரில் வலம் வருகின்றது. இதனைப் பொலிசார் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts