தமிழ் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் தேசிய மக்கள் முண்னணிக்கும் இடையில் போட்டி நடைபெறவுள்ளது.
மாற்றத்தினை கட்டாயம் கொண்டு வர வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள். பொது மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை ஆதரித்து வருகின்றனர்.தமிழ் மக்களின் படுகொலையினை கண்டிக்கும் வகையிலும், வல்லரசு நாடுகளின் செயற்பாடுகளை முறியடிக்கும் வகையிலும் சனல் 4 ஊடகத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அந்த ஊடக தரப்பினை மஹிந்த ராஜபக்ஷ மிக மோசமாக விமர்சித்து வந்தார். ஆனால், தற்போது, மஹிந்த ராஜபக்ஷ அணியுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்துக் கொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனுக்கு சதி செய்கின்றார்கள் என்பதனை தமிழ் மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.