கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் மதவாச்சியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் உம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்திருந்த போதும், தெய்வாதீனமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பஸ் சேவைகளில் இடம்பெறுகின்ற போட்டி காரணமாக ஏற்படும் அதிவேகமே மேற்படி விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும், பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.