பிரிட்டனின் சனல் 4 ஊடகத்தின் கெலம் மக்ரே மற்றுமொரு போலி அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
30 ஆண்டுகளாக நீடித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரச படையினர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்துள்ளதாக போலியான அறிக்கை ஒன்றை மக்ரே சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 5ம் திகதி இந்த அறிக்கை ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வாணிகுமார் என்ற பிரிட்டன் பெண் மற்றும் புலிகளின் உத்தியோகப் பற்றற்ற புகைப்படக் கலைஞர் பென்ஜமின் டிக்ஸி ஆகியோர் இந்த அறிக்கையின் பிரதான சாட்சியாளர்களாக திகழ்கின்றனர்.
புலிகளை இல்லாதொழிப்பதற்காக 2008ம் ஆண்டு படையினர் மிலேச்சத்தனமான கொலைகளை செய்ததாக மக்ரே தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ள போதிலும், புலிகளின் குற்றச் செயல்கள் பற்றி குறிப்பிடவில்லை. மக்ரேயின் இந்த பொய்யான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமைந்துள்ளது என சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.