மலேஷிய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது!

மலேஷிய எயார் லைனுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்தில் தீப்பற்றியமையே இதற்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

300 பயணிகளுடன் சென்ற குறித்த விமானம் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு மெல்போன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts