Ad Widget

பான் கீ மூன் – மைத்திரி இடையே தொலைபேசி உரையாடல்!

இலங்கை மக்களின் ஜனநாயகத்தை பாதுகாத்து அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானம், ஐக்கியம் என்பவற்றை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (04) மாலை தொலைபேசியில் அழைத்து பான் கீ மூன் வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று 20ம் திருத்தத்தையும் அவ்வாறு செய்து முடிக்கப்படும் என தான் நம்புவதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.

20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தனது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார்.

Related Posts