Ad Widget

ஜனாதிபதி அவர்களுக்கு அனந்தி அவர்கள் கடிதம்!

இறுதிச்சமர் நினைவுதினத்தைமுன்னிட்டுவடமாகாணசபையின் உறுப்பினர் கௌரவஅனந்திசசிதரன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களின் விஷேட கவனத்திற்குமுன்வைத்தகோரிக்கைகளின் தமிழ் ஆக்கம்

திகதி 18.05.2015
அதிமேதகு ஜனாதிபதி
மைத்திரிபாலசிறிசேன
ஜனாதிபதிசெயலகம்
காலிமுகத்திடல்
கொழும்பு-01

அதிமேதகு ஐயா!

2009 சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுஉயிர்பிழைத்துவாழும் வடக்குமற்றும் கிழக்குப் பிராந்தியமக்களின் நல்வாழ்வை உயர்த்தக்கோரும் பணிவானவேண்டுகோள்.

18 வைகாசி 2009ம் ஆண்டுஎன்றுமுடிவடைந்தயுத்தத்தால் குறிப்பாக வடக்குமாகாணத்தில் ஏறத்தாழ ஒருலட்சத்து நாற்பத்தாறாயிரம் (146,000) உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடுபிரதேசத்தில் வாழ்ந்த/வாழ்ந்துவரும் எனதுசமூகமக்களுக்குஏற்பட்டஅனைத்துவிதமானதுன்பங்களையும் துயரங்களையும் மனப்பாரங்களுடன் நினைவுகூர்ந்தவளாகஎமதுநாடுஎன்றும் காணாதநல்லாட்சிக்காணமுன்மாதிரியாகதிகழ்ந்துவரும் உங்களிடம் கீழேவிபரிக்கப்படும் வேண்டுகோளைதகுந்தபணிவுடனும் மரியாதையுடனும் முன்வைக்கின்றேன்.

2009 சிவில் யுத்தம் முடிவைடந்ததன் பின்னர் அன்றையஅரசும் மற்றும்மசர்வதேசமனிதாபிமானநிறுவனங்களும் பல்வேறுபட்டஅபிவிருத்தித் திட்டங்களைநடைமுறைப்படுத்தியுள்ளனர். இவைகளில் உட்கட்டமைப்புவசதிகள் என்றும் வீடமைப்புத் திட்டங்களென்றும் பாடசாலைக் கட்டிடங்கள் என்றும் மற்றும் வாழ்வாதாரதிட்டங்கள் பிரதானமானவைகளாகும்.

இவைகள் தவிரயுத்தம் நடைபெற்றுவந்தகாலங்களின் போதுநடைமுறையிலிருந்தமக்களின் சராசரிவாழ்வியலைபாதித்த சிற்சிலதடைச் சட்டதிட்டங்களும் தளர்த்தப்பட்டன.

இருப்பினும் 2009 இறுதியுத்தத்தில் மிகநேரடியாகபாதிப்புக்குள்ளானசமூகத் தொகுதியினரின் நல்வாழ்வு இன்னும் அகலபாதாளத்தில் கிடந்துவருவதுமிகவும் கவலைக்குரியவிடயமாகும். அதாவது இறுதிக்கட்டயுத்தத்தினால் காணாமல் போனோர்கள்ஃ சரணடைந்தவர்களும் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுபின்னர் புனர்வாழ்வுஎனும் பேரில் விடுதலைசெய்யப்பட்டோரும் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இதுவரை குற்றங்கள் நிரூபனமாகாமல் விசாரணைகள் எதுவும் இன்றிகைதிகளாகசிறைவாசம் நடத்திவருபவர்களும் அடங்குவர்.

யுத்தம் முடிவடைந்துஐந்துஆண்டுகள் கடந்தும் இவ்வாறானமானுடவியல் நல்வாழ்வுப் பிரச்சினைகளுக்கு ஒருதீர்வை நோக்கி நகராததன் காரணமாக எனது சமூகத்துக்கு இவைகள் மிகமோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன.

குறிப்பாகசொல்லப்போனால்,

காணாமல் போனவர்களின் மனைவிமார்கள்குழந்தைகளும், இவர்கள் பராமரித்துவந்தசகோதரர்கள் மற்றும் வயதானபெற்றோர்களின் வாழ்வியல் நிலை அசாதாரணமான நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. காரணம் காணாமல் போனவர்களே இவர்களுக்குபக்கபலமாக இருந்துவாழ்வாதாரம் தேடிக்கொடுத்துவந்தனர். இது குறித்து ஐ.நா.சபை உட்பட பல் வேறுநிறுவனங்களும் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக பல் வேறுபட்ட முன்னெடுப்புங்களை செய்தபோதும் இதுவரைபாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல தீர்வு வந்தடையவில்லை.

இவை இவ்வாறு இருக்கஇகடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர்களை இன்னும் முறையான விசாரணைக்கு உட்படுத்தாமல் குற்றவாளியா/ சுற்றவாழியா? என்கின்ற எந்தக் கேள்வியும் இல்லாமல் வாழ்ந்துவருகின்றனர். இதனால் இவர்களை நம்பிவாழ்ந்த இவர்களின் குடும்பத்தினர் மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்லமுடியாதுன்பங்களைஅனுபவித்துவருகின்றனர்.

இதேபோன்று, இறுதியுத்தத்தில் சிறைபிடிக்கப்பட்டுபின்னர் புனர்வாழ்வுஎன்றபெயரில் விடுதலைசெய்யப்பட்டவர்கள் வெறும் நடைப்பிணமாகவாழ்ந்து வருவதும் மிகப்பெரும் துயரமாகும். இவ்வகையினர் வெறும் விடுதலை மாத்திரம் பெற்றதன் காரணமாக அவர்கள் அன்று செய்து வந்த அவர்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளை தொடர இயலாதவர்களாகவும் அதற்கானஊக்குவிப்புமற்றும் பொரளாதார ஆதரவின்றி மிக ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் காணாமல் போனவர்களை பிரதிநிதித்துவபடுத்துபவர்களை தலைமை தாங்கி அதனூடாக அவர்களின் விருப்பத்திற்குரிய பிரதிநிதியாக வடமாகாணசபையின் உறுப்பினர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டதுடன், காணாமல் போனவர்களில் ஒருவராக எனது மூன்று (03)குழந்தைகளின் தகப்பனின் அன்புக்குரிய மனைவியாகவும் இருந்துகொண்டு இதனோடு சம்பந்தப்பட்ட உணர்வுரீதியான அனுபவத்தை பெற்றவளாய் பல ஆண்டு காலமாகபுறையோடிக்கொண்டிருக்கும் இப்பிரச்சனைகளுக்குதீர்வு காணும் ஆவலுடன் பின்வரும் மூன்று (03) கோரிக்கைகளைஅதிமேதகுஉங்களின் விஷேட கவனத்திற்குமுன்வைக்கின்றேன்.

1. எந்தவிதகுற்றங்களும் அடையாளம் காணப்படாது அது குறித்தவிசாரணைகள் எதுவும் நடாத்தப்படாது கடந்த 5 ஆண்டுகாலமாக நாட்டின் பலபாகங்களிலும் உள்ள சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை அதிமேதகு உங்களின் மன்னிப்பின் பேரிலோஅல்லது மனிதாபிமான பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ விடுதலைசெய்யுமாறு இத்தால் கோரப்படுகிறது.

2. யுத்தத்தின்போதுசிறைப்படுத்தப்பட்டுபின்னர் புனர்வாழ்வுஎனும் பேரில் விடுதலைசெய்யப்பட்டு எந்தவித வாழ்வாதார உத்தரவாதமும் இன்றி வாழ்ந்து வருவோர்களினதும் இயுத்தத்தினால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுமதங்களுக்கு வாழ்வாதாரம் தேடித்தந்தவர்களை யுத்தத்தில் இழந்தவர்களுக்கும் வாழ்வாதார தேடல்களை வசதியற்ற வர்களாக வாழ்ந்து வருபவர்களுக்கு மானநிரந்தர வாழ் வாதார விழிமுறைகளைவிஷேட திட்டங்களைகொண்டுவடமாகாணஅரசினூடாகநடைமுறைப்படுத்துமாறு இத்தாழ் வேண்டப்படுகிறது.

3. பல்வேறுபட்டஅமைப்புரீதியாகமுன்னெடுக்கப்பட்டகாணாமல் போனவர்கள் அல்லது சரணடைந்தவர்களின் குறித்தவிசாரணைகளைதுரிதப்படுத்தி இது சம்பந்தமானநிரந்தரமானபதிவொன்றைசம்பந்தப்பட்டஉறவினர்களுக்குவழங்கிஅவர்களைதிருப்தியடையச் செய்யுமாறு இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இறுதியுத்தத்தின்போதும் அதற்குமுன்னர் நடத்தப்பட்ட ஏனைய யுத்தங்களின் போதும் துன்பங்களையும் , துயரங்களையும் மாத்திரம் விளைவாகநுகர்ந்து கொண்டவர்களோடு நானும் ஒருவராக இருந்து கொண்டுமிகவலுவாகநம்புகின்றவிடயம் யாதெனில் மேலேசொல்லப்பட்டகோரிக்கைகளை தீர்க்கும் விடயத்தில் அதிமேதகுஉங்களின் கருணைமிகுமுயற்சிஎனதுசமூகத்தின் நல்வாழ்வில் ஒருமிகப்பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். இதனால் மேலே விபரிக்கப்பட்டுள்ள கொழுந்து விட்டு எரிந்துவரும் எமதுபிரச்சனைகளுக்குஒருநிரந்தரமானதீர்வைஅதிமேதகுநீங்கள் நடைமுறைப்படுத்தும் பொருட்டுஅதற்காகநானும் எனதுசமூகமும் என்றும் உங்களுக்குநன்றி கூற உள்ளோம்.

அதிமேதகுஉங்களுக்குநன்றி

இப்படிக்கு

உண்மையுள்ள

ஒப்பம்
அனந்திசசிதரன் (மா.ச.உ)

பிரதிகள் :
1. கௌரவரணில் விக்கிரமசிங்கபிரதமஅமைச்சர் இ இலங்கை ஜனநாயகசோசலிசகுடியரசுஇகொழும்பு.

2. திருமதிசந்திரிக்காபண்டாரநாயக்ககுமாரதுங்கமுன்னாள் அதிமேதகு ஜனாதிபதிஇலங்கை ஜனநாயகசோசலிசகுடியரசுஇகொழும்பு..

3. திரு.செயிட்.ரா.அட் அல் ஹூசைன் மனிதஉரிமைகளுக்கானஐ.நா.சபைஅதியுயர் ஸ்தானிகர்இ ஜெனீவா

(2009 இறுதிச்சமர் நினைவுதினத்தைமுன்னிட்டுவடமாகாணசபையின் உறுப்பினர் கௌரவஅனந்திசசிதரன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களின் விஷேட கவனத்திற்குமுன்வைத்தகோரிக்கைகளின் தமிழ் ஆக்கம்.)

Related Posts