Ad Widget

கழிவு எண்ணெயால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயம்!

யாழ்ப்பாணத்தில் கழிவு எண்ணெயால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குடிதண்ணீரை விநியோகிப்பதற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை கடந்த சில மாதங்களாக பிரதேச சபைகள் செலுத்தாமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மற்றும் இதனை பிரதேசங்களில் அண்டிய பகுதிகளின் கிணறுகளில் கழிவு எண்ணெய் சேர்ந்தது. இதனால் 70 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த மக்கள் தங்கள் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து வலி.தெற்கு, வலி.வடக்கு பிரதேச சபைகள் குறித்த பகுதிகளுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் நீர் வழங்கலை மேற்கொண்டன.

தினமும் சுமார் 3 இலட்சம் நீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதற்காக இந்தப் பிரதேச சபைகள் 27 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கவேண்டும்.

ஆனால் கடந்த சில மாதங்களாக பிரதேச சபைகள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்கவில்லை. வலி. தெற்கு, வலி.வடக்கு பிரதேச சபைகள் தலா ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டும்.

இந்தத் தொகையை செலுத்தினால் மாத்திரமே இனி தண்ணீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இரு பிரதேச சபைகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது.

Related Posts