எதிர்காலத்தில் ஒருபோதும் குடும்பம் ஒன்றிடம் அதிகாரம் செல்லாத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
டயிம்ஸ் பத்திரிகையாளர்களுடன் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் எந்தவொரு நாட்டுடனும் இலங்கைக்கு பகை இல்லை எனவும் அனைத்து நாடுகளுக்கும் நட்புக் கரம் நீட்டுவதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் தேர்தல் முடிவுகளை வௌியாகி சில நாட்களுக்கு தான் ஜனாதிபதி என்பதை உணரவே முடியவில்லை எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார் என டயிம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.