இன்று முதல் கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு 25 சதவீத கட்டணக் குறைப்பு சலுகை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சகல உள்நாட்டு அழைப்புக்களுக்கும் இந்த கட்டணக் கழிவு நடைமுறைப்படுத்தப்படும்.
மைத்திரி அரசால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இந்த சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
எனினும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களின் அழைப்புக்கான கட்டணங்களில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவிக்பப்பட்டுள்ளது.