தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கான கூட்டணி மாத்திரமே! – டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே கூறி வருகின்றனர். கூட்டமைப்பு பதிவு செய்வதில் தடைகள் இருப்பதாக அதன் தலைவர் கூறுகிறார். தடையாக இருப்பவர்கள் யார்? எனக் கேள்வி எழுப்பகின்றார் அதன் பேச்சாளர். இன்னொருவர் கனடாவில் சென்று கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஆதரவு தேடுகிறார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணிலின் நிகழ்வுகளை பகிஸ்கரிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால். பலர் பிரதமரின் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்கும்போது, அது அவரவர் விருப்பம் என்கிறார்கள். இவர்களுக்கென்று ஒரு கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.

அவ்வாறு கொள்கை ஏதும் கொண்டிருப்பின் அதனை முன்வைத்து, எதிர்வரும் தேர்தலில் தனித் தனியாக இத் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றியீட்டிக் காட்டட்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொழும்பில்; அண்மையில் புத்திஜீவிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆரசியல் அவதானிகள் ஆகியோருடன் இடம்பெற்ற பிரத்தியக சந்திப்பின் போது செயலாளர் நாயகம் அவரகள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் அண்மையில், சர்வாதிகாரம், தனி நபர் அரசியல், ஜனநாயக வெளிப்படைத் தன்மையற்ற அரசியல என பல பரிமானங்களைத் தாண்டி தேர்தலுக்கான ஒரு கூட்டமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்ட காலமாக இயங்கி வருவதாக அம்பாறையில் வைத்து கூறியிருக்கிறார்.

இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதலே இதனை நாங்கள் கூறி வருகின்றோம். ஈ. பி. டி. பி. யினராகிய எமது ஜனநாயக ரீதியிலான அரசியல் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் எம் பக்கம் அணி திரள்வதைக் கண்டு அஞ்சிய புலிகள், இதனைத் தடுக்கும் ஒரேயொரு நோக்கத்திற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டி எழுப்பினர். உண்மை இதுதான். இதனை இன்று சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஈ.பி.டி.பி.யினராகிய நாம் எமது மக்களினதும் எமது பகுதிகளினதும் நலன் கருதி அன்று தொடக்கம் தொடர்ந்து ஆற்றிவரும் பணிகளுக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்து வருகின்றனர்.

ஆனால், எமது மக்களின் வாக்குகளில் மாத்திரம் குறியாக இருந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அம்மக்களுக்காக இதுவரையில் எதையுமே செய்ததில்லை எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகவும்.

Related Posts