Ad Widget

யாழ். மாநகரசபை சாரதிகள் பணிப் பகிஷ்கரிப்பு

யாழ். மாநகரசபை சாரதிகள் தமக்கான மறுக்கப்பட்ட 8 அடிப்படை உரிமைகளை வழங்க கோரி இன்று திங்கட்கிழமை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

jaffna-munincipal

அகில இலங்கை ஸ்தல ஸ்தாபன சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையினால் நிரந்தர நியமனம் பெற்று வாகனப் பகுதியில் கடமையாற்றுகின்ற அனைத்து சாரதிகளுக்கும் பதில் சாரதிகள் கடிதங்கள் வழங்கல், 65 சாரதிகளுக்கான ஓய்வு அறை மற்றும் மலசல கூடம் அமைத்து தருமாறும், நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாத சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரியும் இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

தமது அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு யாழ். மாநகர சபை ஆணையாளரிடம் தெரிவித்த போதும், அதனை அவர் செய்து கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அவர்கள் இதுவரையில் தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்கள்.

இவ்வாறு தமக்கான அடிப்படை வசதிகளை செய்துதர மறுத்தால், தாம் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் சாரதிகள் மேலும் தெரிவித்தனர்.

Related Posts