யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக நாகவிகாரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார்.
நாகவிகாரையில் நடைபெற்ற வழிபாடுகளில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.