இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
					




 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							