Ad Widget

நான் அநாதையாப் போயிட்டன், மகனை தந்து விடுங்கள் – ஜெயக்குமாரி

“என்ர காணாமற் போன பிள்ளை வரவேணும். அவனை எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்கோ” பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி கண்ணீர் மல்க நீதி மன்றத்துக்கு முன்பாக இவ்வாறு கோரினார்.

Jeyakumari-2

ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி நிபந்தனைப் பிணையுடன் நேற்று விடுவிக்கப்பட்டார். அவர் நீதிமன்ற வாயிலினூடாக வெளியே வந்ததும், வெளியில் நின்றிருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அவரை ஓடிச் சென்று கட்டி ஆரத்தழுவினர். பெரும்பான் மையினத்தைச் சேர்ந்த மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து கையில் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

ஜெயக்குமாரி கண்ணீர் மல்கியபடி தனது இரு கரங்களையும் கூப்பிக் கொண்டு, தனது விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

அழுதவாறே ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார். “என்ர காணாமற் போன பிள்ளையத்தான் தேடித் திரியுறன். இண்டைக்கும் என்ர பிள்ளை வரவேணும். நான் அநாதையாப் போயிட்டன்.

என்ர பொம்பிளை பிள்ளை தனிச்சுப் போயிட்டுது. என்ர பிள்ளையை தனிய தவிக்க விட்டிட்டு ஒரு வருசம் சிறையில இருத்திட்டாங்கள்” என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

Related Posts