யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் சமையல் அறையில் அமைக்கப்பட்ட புகைப்போக்கி வித்தியாசமான முறையில் எண்ணெய் பரல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் சீமெந்து கட்டுக்களிலான புகைப்போக்கிகள் வீடுகளில் நிர்மாணிக்கப்படுவது வழமை.
எனினும் இந்த புகைப் போக்கியானது 5 எண்ணெய் பரல்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. புகைப்போக்கி சரிந்து விழாமல் இருப்பதற்கு உறுதுணை கம்பிகளும் கட்டப்பட்டுள்ளன.