சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரத்தொழிலாளர்களுக்காக விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (20) காலை உதயசூரியன் குடியிருப்புப்பகுதியில் சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
அதிபர் க.அருந்தவபாலன் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன் முதற்கட்டமாக 5 விடுதிகள் 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.
நகராட்சிமன்றம் செய்த அபிவிருத்திகளில் இது முதன்மையானது எனவும் சமூகம் சமூகமாக திகழ சுகாதாரத் தொழிலாளர்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்